
கொழும்பு - மத்தேகொட கிரிகம்பமுனுவ பகுதியில் உள்ள கைப்பை தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று (9) அதிகாலை 1 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது தீயை அணைக்க கோட்டை மற்றும் ஹொரணையை சேர்ந்த நான்கு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 17 அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த அனர்த்தத்தின் போது தீயை அணைக்கச் சென்ற உரிமையாளர் தீக்காயங்களுடன் ஹோமாகம அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்த 26 இயந்திரங்கள் மற்றும் உற்பத்தி மூலப்பொருட்கள், கோடிக்கணக்கானசொத்துக்கள் தீயில் எரிந்து நாசமானதாகவும் கூறப்படுகிறது.
No comments: