
நயினாதீவு விகாராதிபதி நவதகல பதும கிர்த்தி திஸ்ஸ, யாழ். மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபனை சந்தித்து கலந்துரையாடினார்.
இச் சந்திப்பு அரச அதிபர் அலுவலகத்தில் இன்றைய தினம் காலை இடம்பெற்றுள்ளது.
இச் சந்திப்பில் தையிட்டி விகாரை தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், அரச அதிபரால் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாக விகாராதிபதி கேட்டறிந்து கொண்டார்.
மேலும் விகாராதிபதி தமது பக்க நிலைப்பாடுகளையும் அரச அதிபரிடம் தெரிவித்தார்.
No comments: