News Just In

12/04/2025 09:05:00 AM

உலகின் முதல் முறையாக ஒற்றை டோஸ் டெங்கு தடுப்பூசி அறிமுகம்

உலகின் முதல் முறையாக ஒற்றை டோஸ் டெங்கு தடுப்பூசி அறிமுகம்




பிரேசில் அரசாங்கம் நேற்றையதினம் உலகின் முதல் ஒற்றை டோஸ் டெங்கு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

சாவ் பாலோவில் உள்ள புகழ்பெற்ற புட்டான்டன் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 'புட்டான்டன் டிவி எனப்படும் இந்த தடுப்பூசி 12 முதல் 59 வயதுடையவர்களுக்கு செலுத்தப்பட தகுந்தது.

தற்போது கிடைக்கக்கூடிய டெங்கு தடுப்பூசிக்கு மூன்று மாத இடைவெளியில் இரண்டு டோஸ்கள் தேவைப்பட்ட நிலையில்இ இந்த புதிய தடுப்பூசி ஒரு டோஸ் போதுமானது.

பிரேசிலில் 16000 தன்னார்வலர்களிடம் எட்டு ஆண்டுகள் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் கடுமையான டெங்குவுக்கு எதிராக இந்த தடுப்பூசி 91.6 சதவீதம் பயனுள்ளதாக இருந்தது.

2024 ஆம் ஆண்டில் உலகளவில் 14.6 மில்லியன் பாதிப்புகளும் 12000 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

No comments: