News Just In

12/04/2025 09:02:00 AM

இலங்கையை உலுக்கபோகும் மற்றுமொரு பேராபத்து - எச்சரிக்கும் பேராசிரியர் நா.பிரதீபராஜா.

இலங்கையை உலுக்கபோகும் மற்றுமொரு பேராபத்து - எச்சரிக்கும் பேராசிரியர் நா.பிரதீபராஜா..



இலங்கை மிக கிட்டிய காலத்தில் மிகப்பெரியளவிலான புவிநடுக்க வாய்ப்பையும் கொண்டுள்ளது என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இலங்கைக்கு அண்மித்த கவசத்தகடுகளில் மிகச்சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் இடம்பெற்றுக்கொண்டே வருகின்றன.

மிகச்சிறிய அளவில் அதிகளவில் இடம்பெறும் நிலநடுக்கங்கள் பாரிய அளவில் ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தும்.அது தொடர்பிலும் இனி கவனம் செலுத்த வேண்டும்.

டிட்வா புயல் இலங்கையில் இன்னும் ஒருநாள் நிலைத்திருந்தாலும் தற்போதை உயிரிழப்பை விட ஐந்து அல்லது ஆறு மடங்கு அதிகமான உயிரிழப்பை சந்தித்திருக்க வேண்டும்.

கடந்த 17ஆம் திகதி என்னுடைய முகநூலில் இந்த அனர்த்தம் தொடர்பில் பதிவொன்றையிட்டேன், அதனை தொடர்ந்து வட மாகாணத்தில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது.

ஆனால் வளிமண்டலவியல் திணைக்களம் ஏனைய மாகாணங்களில் இந்த விடயங்கள் தொடர்பில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

No comments: