News Just In

12/09/2025 08:30:00 AM

மூதூர் பிரதேச செயலாளருக்கு இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கம் வழங்கிய கௌரவம்!

மூதூர் பிரதேச செயலாளருக்கு இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கம் வழங்கிய கௌரவம்!


அபு அலா
மூதூர் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டு கடமையேற்றுள்ள இலங்கை நிர்வாக சேவை அதிகாரி பிர்னாஸ் இஸ்மாயிலுக்கு இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

புதிய பிரதேச செயலாளரை வாழ்த்தி வரவேற்கும் முகமாக இன்று (08) மூதூர் பிரதேச செயலகத்திற்கு நேரடியாகச் சென்ற இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.சிபான் தலைமையிலான தொழிற்சங்க உறுப்பினர்களால் பிரதேச செயலாளர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

இதன்போது, புதிய பிரதேச செயலாளருக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட தொழிற்சங்க பொது செயலாளர் ஏ சிபான், அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் கடுமையாக சேதமடைந்த மூதூர் பிரதேசத்தை அவசரமாக மீளக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியம் குறித்து கலந்துரையாடினார்

No comments: