News Just In

12/26/2025 08:50:00 AM

அநுரவை சீண்டும் நாமல் எம்.பி.

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சர்களின் பணம் – அநுரவை சீண்டும் நாமல் எம்.பி.


உகண்டாவில் ராஜபக்சக்களால் பதுக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்ட டொலரை அநுர அரசாங்கம் ஏன் இன்னமும் மீட்கவில்லை என மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசாங்கத்தினர் ராஜபக்சக்களின் நிதி உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளது என்று தொடர்ச்சியாக கூறிவந்தனர்.

ஆனால் இதுவரை அந்த நிதியை மீட்கவில்லை. அரசாங்கத்தால் குறிப்பிடப்பட்ட நிதியை மீட்பதற்கு அனைத்து ஒத்துழைப்பையும் நாங்கள் வழங்குவோம்.

அந்த டொலரை மீட்பதற்கு பொருத்தமான காலமாகவும் இக்காலமே அமைந்துள்ளது. இதற்காக சத்தியக் கடதாசிகளை வழங்கவும் தயாராக உள்ளேன்

ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயற்படுவது அந்த இரு கட்சிகளின் தனிப்பட்ட விருப்பம்.

ஆனால், நாட்டின் ஜனநாயகம் பேணப்படுவதற்கு இந்த இணைவு அவசியமானது. இணைந்து செயல்பட வேண்டிய இடங்களில் எதிரணியாக நாமும் இணைந்து செயற்படுவோம் என்றார்.

No comments: