நே ற்றையதினம் 06.12.2025 முறக்கொட்டன் சேனை, கிரான் மற்றும் கிண்ண யடி போன்ற இடங்களில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட மக்களுக்கான நிவாரண உதவிகள் எம்மால் வழங்கி வைக்கப்பட்டது.
மக்களுக்கான ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற நிவாரணங்கள் மற்றும் இழப்பீடுகளை நாங்கள் வரவேற்கின்றோம். எமது மாவட்டத்திலும் வெள்ளத்தினால் அடிக்கடி பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு புதிய வீடுகள் மற்றும் புதிய காணிகளையும் வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் ஜனாதிபதி அதிகாரிகளிடமிருந்து தரவுகளைப் பெற்று வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.
மலையகத்தில் மக்களது வீடுகள் மண்சரிவுக்கு உள்ளாகக்கூடிய இடங்களிலேயே காணப்படுகின்றன. பல தசாப்தங்களாக அவர்கள் கோரிக்கை விடுத்துள்ள நில உரிமையினை வழங்கி; அவர்களுக்கான வீடுகளையும் கட்டிக் கொடுப்பது தற்காலத்தில் சிறந்தது. இதனூடாக அவர்கள் மண்சரிவிலிருந்து பாதுகாப்பு பெறக்கூடியதாகவும், நில உரிமையை அவர்கள் பெற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருக்கும்.
No comments: