News Just In

12/08/2025 06:31:00 PM

யாழில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்

யாழில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்



அமெரிக்காவினால் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள விமானம் ஒன்று யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இன்று தரையிறங்கியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட பேரிடரினை அடுத்து விநியோக நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் இரண்டு C130J Super Hercules விமானங்களை அமெரிக்கா வழங்கியுள்ளது.

குறித்த விமானங்கள் நேற்றையதினம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கின.

இந்நிலையில் வடபகுதிக்கான நிவாரணங்களை பொருட்களை ஏற்றிய அமெரிக்கா விமானம் ஒன்று இன்று காலை யாழ் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

பேரிடரினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பொருட்களை கொண்டு செல்லும் நோக்கில் இந்த விமானங்கள் அமெரிக்காவினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: