News Just In

12/22/2025 06:27:00 PM

தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய யாழ். பல்கலை மாணவர்கள்


தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய யாழ். பல்கலை மாணவர்கள்




தையிட்டி விகாரைக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலை முன்பாக போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

“தையிட்டி எங்கள் சொத்து – எங்கள் காணிகளை அபகரிக்காதே” என பிரதானமாக கோஷங்களை எழுப்பிய மாணவர்கள் விகாரையை அகற்ற கோரினர்.

அத்துடன் தையிட்டியில் நேற்று (21) போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பொலிஸார் காட்டுமிரண்டித்தனமாக செயற்பட்டமையையும், அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தமைக்கும் கண்டனங்களை தெரிவித்தனர்.

No comments: