News Just In

12/06/2025 10:50:00 AM

நிவாரணங்கள் மக்களை உடனடியாக சென்றடைய அரசு துரித பொறிமுறை ஒன்றினை உருவாக்க வேண்டும்.இரா சாணக்கியன்

நிவாரணங்கள் மக்களை உடனடியாக சென்றடைய அரசு துரித பொறிமுறை ஒன்றினை உருவாக்க வேண்டும் .இரா சாணக்கியன் 


இன்றைய தினம் மட்டக்களப்பு சந்திவெளி மற்றும் முறாவோடை பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களது தேவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் மற்றும் அத்தியாவசிய தேவையான பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது. அவர்களுக்குரிய முதலாவது அத்தியாவசிய நிவாரணம் எம்மால் வழங்கப்பட்டது. நாடு முழுவதிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற வகையில் நிவாரண உதவிகள் மக்களிடம் சென்றடைவதில் குறிப்பிட்ட கால அவகாசம் எடுக்கின்றது. இதற்கான பொறிமுறையை அரசு உடனடியாக தொடர்புள்ள அரச ஊழியர்களை கொண்டு வினைத்திரனாக கையாள வேண்டும். இதன் போது கோறளைப்பற்று தவிசாளர், உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் உட்பட எனது கல்குடா தொகுதி பொறுப்பாளர் அவர்களும் கலந்து கொண்டார்கள்.

No comments: