News Just In

12/19/2025 06:37:00 AM

தடுப்பூசி விஷமானதால் உயிரிழந்த இளம் பெண்! நீதி கோரும் உறவினர்கள்

தடுப்பூசி விஷமானதால் உயிரிழந்த இளம் பெண்! நீதி கோரும் உறவினர்கள்






களுத்துறை - மத்துகம வைத்தியசாலையில் தடுப்பூசி விஷமானதால் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 23 வயதுடைய சந்தமினி திவ்யாஞ்சலி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இந்த நிலையில் உயிரிழந்த பெண்ணுக்கு அவரது பெற்றோரும் உறவினர்களும் நீதி கோரியுள்ளனர்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
கடந்த 12 ஆம் திகதி காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்றுக்கொள்ளவதற்காக IDH வைத்தியசாலைக்கு சந்தமினி சென்றிருந்தார்.

அவரைப் பரிசோதித்த வெளிநோயாளர் பிரிவில் இருந்த வைத்தியர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். ஆனால் படுக்கைகள் இல்லாததால் அறைக்குள் அனுமதிக்கவில்லை. நோயாளி வெளியேறத் தயாராகும் போது அவர் மயக்கமடைந்துள்ளார்.

பின்னர் நோயாளி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 14 ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகன்றது.

இறந்த பெண்ணுக்கு நீதி வழங்கவும், இதுபோன்ற ஒழுங்கற்ற செயல்களால் மேலும் உயிரிழப்புகளைத் தடுக்கவும் அவரது பெற்றோரும் உறவினர்களும் அதிகாரிகளை வலியுறுத்துகின்றனர்.

No comments: