வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி குழுவினர் விஜயத்தை மேற்கொண்டனர். சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் நௌசாத் முஸ்தபா தலைமையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு Doxycycline மாத்திரைகள் வழங்கப்பட்டதுடன், சுகாதாரப் பாதுகாப்பு விழிப்புணர்வு அமர்வுகளும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இப்பகுதியில் டெங்கு மற்றும் ஏனைய நுளம்பினால் பரவும் நோய்களை கட்டுப்படுத்தும் ஒரு பகுதியாக, நுளம்புக் கட்டுப்பாட்டு பரிசோதனைகள் மற்றும் புகை விசிறல் (Fogging) செயற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
No comments: