News Just In

11/30/2025 06:53:00 PM

மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த உலங்கு வானூர்தி விபத்து

மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த உலங்கு வானூர்தி விபத்து




சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த உலங்கு வானூர்தி ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக உலங்கு வானூர்தி ஒன்றே இவ்வாறு விபத்திற்குள்ளானது.

லுனுவில மற்றும் வென்னப்புவ இடையேயான பகுதியில் விழுந்து இந்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்திற்குள்ளான போது குறித்த உலங்கு வானூர்தியில் நால்வர் பயணித்ததாகவும், குறித்த நால்வரும் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.




No comments: