News Just In

11/27/2025 11:46:00 AM

காரைதீவு - மாவடிப்பள்ளி பிரதான வீதி முழுமையாக மூடல்

காரைதீவு - மாவடிப்பள்ளி பிரதான வீதி முழுமையாக மூடல்


நூருல் ஹுதா உமர்

தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக, அம்பாறை மாவட்டத்தில் உள்ள காரைதீவு மற்றும் மாவடிப்பள்ளி பகுதிகளை இணைக்கும் பிரதான வீதி இன்று காலை முதல் காலவரையின்றி முழுமையாக மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்த வீதியில் நீர்மட்டம் அபாயகரமான அளவுக்கு உயர்ந்து காணப்படுவதால், பொதுமக்கள் மற்றும் வாகனங்களின் பாதுகாப்புக் கருதி இந்த அத்தியாவசிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வீதியின் குறுக்கே நீர் பாய்வதாலும், பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியிருப்பதாலும், பாதையின் நிலைமை உறுதி அற்றதாக மாறியுள்ளது. இதனால், வீதியைப் பயன்படுத்தும் மக்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகாமல் தடுக்கவே இந்த மூடல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments: