News Just In

11/21/2025 09:42:00 AM

அவசரமாக தாந்தாமலையில் போடப்பட்ட தொல்பொருள் திணைக்கள அறிவித்தல் பலகை

அவசரமாக தாந்தாமலையில் போடப்பட்ட தொல்பொருள் திணைக்கள அறிவித்தல் பலகை.




மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப்பெருநிலம் மண்முனை தென்மேற்கு பிரதேச பிரிவில் உள்ள தாந்தாமலை முருகன் ஆலயத்தில் செல்லும் வீதிகளில் இரு இடங்களில் இன்று 20/11/2025, பி.ப:1.30 மணிக்கு தொல்பொருள் திணைக்களத்தால் அறிவித்தல் பலகை இடப்பட்டுள்ளது .
அதில் தாந்தாமலை தொல்லியல் இடம் என மூன்று மொழிகளாலும் எழுதப்பட்ட அறிவித்தல் பலகை தாந்தாமலை செல்லும் நாப்பது வட்டை சந்தியில் தாந்தாமலை முருகன் ஆலயத்தை அம்புக்குறி காட்டி போடப்பட்டதுடன் மற்றய அறிவித்தல் பலகை தாந்தாமலை முருகன் ஆலத்துக்கு அண்மையில் உள்ள பொலிஷ் சாவடி நிலைய சந்தியில் தாந்தாமலை முருகன் ஆலயத்தை அம்புக்குறியிட்டு காட்டப்பட்டுள்ளது.

No comments: