News Just In

11/12/2025 07:50:00 AM

இருதய நோயுள்ள சிறுவவர்களுக்கு இந்தியாவில் அறுவைச் சிகிச்சைகள் சுகாதார அமைச்சு ஒப்பந்தம்

இருதய நோயுள்ள சிறுவவர்களுக்கு இந்தியாவில் அறுவைச் சிகிச்சைகள்
சுகாதார அமைச்சு ஒப்பந்தம்






நாட்டில் இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியாவில் சிகிச்சையளிக்கும்நோக்குடன்சிறப்புஒப்பந்தம்கைச்சாத்திடப்படப்பட்டுள்ளது.இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள கொச்சின் அமிர்தா வைத்தியசாலையில், இச்சிகிச்சை இடம்பெறவுள்ளது.இது குறித்த ஒப்பந்தத்தில்,சுகாதார அமைச்சும் கொழும்பு ரோட்டரி கழகத்துக்குமிடையில்,கைச்சாத்திடப்பட்டது.

 சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க மற்றும் கொழும்பு மேற்கு ரோட்டரி களகத்தின் தலைவர் கே.பி. நாகராஜா ஆகியோர் இதில்,கையெழுத்திட்டனர்.இதற்கிணங்க ஐம்பது சிறுவர்கள்,இருதய நோய்க்கான சிகிச்சைகளைப் பெறவுள்ளனர்.கொழும்பு மேற்கு ரோட்டரி கழகம், மேற்கு கொச்சி ரோட்டரி கழகம் ஆகியன இணைந்து ரோட்டரி குளோபல் திட்டத்தின் மூலம் சிகிச்சைகளுக்கான நிதியை வழங்குகிறது.

நாட்டில் இருதய நோயால் பாதிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் அறுவை சிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்,இந்த எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.காத்திருப்போர் பட்டியலில் உள்ளோர், முன்னுரிமை அடிப்படையில் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுவர்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதன் முதல் கட்டத்தின் கீழ், 60 சிறுவர்களுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது,இதன் இரண்டாம் கட்டத்தை செயல்படுத்தவே இந்த ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், உள்ளூர் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் இந்தியாவின் கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனைக்கு பயிற்சிக்காகஅனுப்பப்படவுள்ளனர்.கருப்பையில் இருக்கும்போதே இருதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அடையாளம் காண பயிற்சித் திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளன.

No comments: