News Just In

11/12/2025 07:54:00 AM

திடீரென மாயமாகும் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகள்!


திடீரென மாயமாகும் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகள்!



மேல் மாகாணத்தில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் மட்டும் மேல் மாகாணத்தில் 10 மோட்டார் சைக்கிள்களும், 3 முச்சக்கர வண்டிகளும் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விசாரிக்க விசேட விசாரணைக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யூ.வூட்லர் தெரிவித்துள்ளார்.

No comments: