News Just In

11/07/2025 12:27:00 PM

பிணைக் கைதிகளின் உடல்களை ஒப்படைத்த ஹமாஸ்

பிணைக் கைதிகளின் உடல்களை ஒப்படைத்த ஹமாஸ்



: இறந்த இஸ்​ரேல் பிணைக்​ கை​தி​களின் உடல்​களை காசா​வில் உள்ள செஞ்​சிலுவை சங்​கத்​திடம் ஹமாஸ் ஒப்​படைத்​துள்​ள​தாக இஸ்​ரேல் ராணுவம் தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து இஸ்​ரேல் ராணுவ வட்​டாரங்​கள் கூறிய​தாவது: ஹமாஸ் அமைப்​பினர் இறந்த இஸ்​ரேல் பிணைக்​ கை​தி​களின் உடல்​களை காசா​வில் உள்ள செஞ்​சிலுவை சங்​கத்​திடம் ஒப்​படைத்​துள்ளது. அந்த உடல்​கள் இஸ்​ரேலுக்கு அனுப்​பி வைக்​கப்பட உள்ளன.

அக்​டோபர் 10-ம் தேதி அமெரிக்க மத்​தி​யஸ்​தத்​தின் முயற்​சி​யாக போர் நிறுத்த ஒப்​பந்​தம் ஏற்​பட்​டது. அதன் சமீபத்​திய முன்​னேற்​ற​மாக இது நடந்​துள்​ளது. முன்​ன​தாக 21 பிணைக்​கை​தி​களின் உடல்​களை போர் நிறுத்த விதி​முறை​களின் கீழ் இஸ்​ரேலிடம் ஹமாஸ் ஒப்​படைத்​தது. இவ்​வாறு அந்த வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.

போர் நிறுத்த ஒப்​பந்த மீறல்​கள் இருந்​த​போ​தி​லும் 15 பாலஸ்​தீனர்​களின் உடல்​களை இஸ்​ரேல் அனுப்​பிய​தாக காசா மருத்​து​வ​மனை அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். கடந்த மாதம் போர் நிறுத்​தத்​திலிருந்து இஸ்​ரேலிய காவலில் வைக்​கப்​பட்​டிருந்த 285 உடல்​களை சர்​வ​தேச செஞ்​சிலுவை சங்​கம் காசா​விற்கு கொண்டு சென்​றுள்​ளது. இருப்​பினும், டிஎன்ஏ சோதனை கருவி​கள் இல்​லாத​தால் உடல்​களை அடை​யாளம் காணுவது சிக்​கலாகி உள்​ளது என காசா சுகா​தார அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்

No comments: