News Just In

11/18/2025 07:35:00 AM

பரவிவரும் மூளையை உண்ணும் அமீபா தொற்று; சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு விசேட அறிவுறுத்தல்

பரவிவரும் மூளையை உண்ணும் அமீபா தொற்று; சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு விசேட அறிவுறுத்தல்



கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா தொற்று பரவி வரும் நிலையில், சபரிமலை செல்லும் பக்தர்கள் நீர் நிலைகளில் குளிக்கும் போது, எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்த மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

கேரளாவில் சில இடங்களில், 'அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்' என்ற நோய் பரவி வருகிறது. இந்தநிலையிலேயே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குளிக்கும் போது மூக்கிற்குள் நீர் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் ஏற்கனவே உள்ள பிரச்சினைகளுக்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள், அவற்றை தொடர்ந்து சாப்பிட வேண்டும்

மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள், அதற்கான ஆவணங்கள் மற்றும் மருந்துகளுடன் பயணிப்பது அவசியம்.

சபரிமலை யாத்திரை புறப்படும் முன், நடைபயிற்சி போன்ற எளிதான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

மலை ஏறும் போது மெதுவாகவும், இடைவெளி விட்டும் ஏற வேண்டும். கொதிக்க வைத்த நீரையே குடிக்க வேண்டும். இவ்வாறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

No comments: