
முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டம் வடக்கு மக்களின் யானை பசிக்கு சோளம் பொரி போன்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று (12.11.2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு கிழக்கில் 30 ஆண்டு காலமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், இன அழிப்புக்கு உள்ளானவர்கள், கைதிகளாக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.
முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் பொதுவான விடயங்களில் சில நல்ல விடயங்கள் இருக்கின்றன. ஆனால், வடக்கு கிழக்கு மக்களின் பார்வையில் அது திருப்திகரமானதாக இல்லை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பாலத்திற்கான ஆரம்பகட்ட வேலைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது.
கித்தூள், உறுகாமம் ஆகிய இரு குளங்களையும் இணைத்து மேற்கொள்ளப்படுகின்ற முந்தானை ஆற்று வேலைத்திட்டத்திற்காக முதற்கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது. பொண்டுக்கல்சேனை, வாழைச்சேனை கடற்றொழில் துறைமுகம் ஆகியவற்றிற்கும் நிது ஒதுக்கப்பட்டுள்ளது.

எனினும், மாவட்டத்தின் படுவான்கரையும் எழுவாங்கரையை இணைக்கின்ற மண்டூர் குருமண்வெளி ஓடத்துறைக்குரிய பாலம், அம்பிளாந்துறை குருக்கள்மடம், ஓடத்துறைக்குரிய பாலம் கிண்ணையடி மற்றும் சந்திவெளி போன்ற ஆறுகளை கடந்து செல்வதற்கான பாலங்களை அமைப்பதற்குரிய எந்த ஒரு விடயமும் இதில் சொல்லப்படவில்லை.
No comments: