News Just In

11/10/2025 06:40:00 PM

அநுர அரசின் அடுத்த வேட்டை! சிக்கப் போகும் அர்ஜுன் மகேந்திரன்

அநுர அரசின் அடுத்த வேட்டை! சிக்கப் போகும் அர்ஜுன் மகேந்திரன்



இலங்கை அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய நிதி மோசடியாக கருதப்படும் மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் பிரதான சந்தேகநபரான முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாடொன்றில் மகேந்திரன் பதுங்கியுள்ள நிலையில், இலங்கைக்கு நாடு கடத்துவதற்கான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஒகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தாக்கல் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து, செப்டம்பர் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு தலைமை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

எனினும் அர்ஜுன் மகேந்திரன் நீதிமன்ற உத்தரவுக்கு இன்னும் பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, அவரை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான அடுத்த கட்டமாக சர்வதேச பொலிஸ் பிடியாணை பிறப்பிக்க தேவையான அறிக்கையை தாமதமின்றி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க குற்றப் புலனாய்வுத் துறை தயாராகி வருகிறது.

அர்ஜுன் மகேந்திரனை நாட்டை விட்டு வெளியேற அனுமதித்ததாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் இயக்குநர் நாயகம் ரங்க திசாநாயக்க மீது சில தரப்பினரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளின் பின்னணியில் இந்த சட்ட நடவடிக்கை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது.

அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: