தாவூத் இப்ராஹிம் உடன் தொடர்புடைய அமைப்பு தென்னிந்தியா வழியாக போதைப் பொருட்களை கடத்துவதற்கு இலங்கையர்களுடன் இணைந்து செயற்படுவதாக இந்திய புலனாய்வு அமைப்புகள் அண்மையில் தெரிவித்தன.
இதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை உள்ளீர்க்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது குறிப்பாக மும்பையை தளமாகக் கொண்டு செயற்படும் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல், இலங்கை கும்பல்களுடன் நீண்டகால உறவுகளைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் இந்தியா எவ்வாறு அமெரிக்காவிற்கு அடிமையாக உள்ளதோ அதேபோன்று ஈழத்தமிழர்களும் தங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என நினைப்பதாகவும் பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் தெரிவித்துள்ளார்
No comments: