News Just In

11/04/2025 03:02:00 PM

“நிசப்த வியாக்கியானம்” கவிதை நூல் வெளியீடு!

“நிசப்த வியாக்கியானம்” கவிதை நூல் வெளியீடு


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
ஏட்டுலா கனவாக்கம் அமைப்பின் ஏற்பாட்டில் இளம் எழுத்தாளரான அதீனா அபூஉபைதா எழுதிய “நிசப்த வியாக்கியானம்” எனும் கவிதை நூல் வெளியீடு ஓட்டமாவடி தேசியக் கல்லூரியில் கடந்த ஞாயிறன்று இடம்பெற்றது.

நூலாசிரியர் அதீனா, நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் முகாமைத்துவ பீட கணக்கியல் பேராசிரியர் கலாநிதி. எம்.சி.ஏ. நாஸர், சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்ட இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. எப்.எச்.ஏ. ஷிப்லி ஹஸன் ஆகியோருக்கும் ஏனைய அதிதிகளுக்கும் கவிதை நூலின் பிரதிகளைக் கையளிப்பதைப் படங்களில் காணலாம்.

ஓட்டமாவடி - பாலைநகர் கிராமத்தைச் சேர்ந்த அதீனா, பிரத்தியேக வகுப்புக்களுக்குச் செல்லாது பாடசாலைக் கல்வியை மட்டும் ஊக்கத்துடன் கற்றதோடு அந்தக் கிராமத்திலிருந்து பல்கலைக் கழகம் சென்ற முதலாமவர் என்ற சாதனையும் அந்தக் கிராமத்திலிருந்து முதலாவதாக நூல் வெளியிட்ட பெண் என்ற சிறப்பையும் இவர் பெற்றுள்ளார்.

இவர் தற்போது இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் சமூக விஞ்ஞானம் மற்றும் மொழிகள் பீடத்தின் தகவல் தொடர்பாடல் தொழினுட்பத் துறை ஆங்கில மொழி மூலக் கற்கை நெறியை மேற்கொண்டு வருகின்றார்.

No comments: