News Just In

11/13/2025 06:09:00 AM

தஞ்சையில் ஓர் அடி உயர ஐம்பொன் மீனாட்சியம்மன் சிலை கண்டெடுப்பு

தஞ்சையில் ஓர் அடி உயர ஐம்பொன் மீனாட்சியம்மன் சிலை கண்டெடுப்பு



தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், பாந்தக்குளத்தைச் சேர்ந்தவர் சரண்யா. இவர் இன்று தனது வீட்டில் கழிவு நீர் தொட்டி அமைப்பதற்கான தொழிலாளர்கள் மூலம், பள்ளம் பறித்துக்கொண்டிருந்த போது, 6 அடி ஆழத்தில், சிலை இருப்பது கண்டறியப்பட்டது.

தொடர்ந்து தொழிலாளர்கள் குழியை பறித்து, அந்தச் சிலையை எடுத்தபோது, ஐம்பொன்னாலான சுமார் ஓர் அடி உயரமுள்ள தோளில் கிளி அமர்ந்து இருக்கும் நிலையில், 6 கிலோ எடையிலான மீனாட்சியம்மன் சிலை எனத் தெரியவந்தது. இது குறித்து சரண்யா உடனடியாக வருவாய் துறையினருக்கு தகவல் அளித்தார்.

சரண்யா வீட்டுக்குச் சென்ற பேராவூரணி வட்டாட்சியர் சுப்பிரமணியன், சிலையை கைப்பற்றி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றார். இதையறிந்த திமுக எம்.எல்.ஏ. அசோக்குமார் அலுவலகத்துக்குச் சென்று சிலையை பார்வையிட்டார்.

மீட்கப்பட்ட சிலையானது பல ஆண்டுகள், பழமையானது என கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மேலதிகாரிகளின் உத்தரவின் போில் அடுத்தக் கட்ட முடிவு எடுக்கப்படும் என வட்டாட்சியர் அலுவலகத்தினர் தெரிவித்துள்ளனர்.

No comments: