News Just In

11/26/2025 07:45:00 PM

650 சிங்கள பௌத்த இடங்கள் : அதிர்ச்சி காட்டும் தேரர்!

650 சிங்கள பௌத்த இடங்கள் : அதிரிச்சி   காட்டும் தேரர்!




தொல்லியல் திணைக்கள சர்ச்சை தற்போது நாட்டில் பல பிரச்சினைகளை கிளப்பியுள்ளது.தற்போதைய அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கைககள் வரவேற்கத்தக்கவையாக உள்ளன.

போதைப்பொருள் ஒழிப்பு, ஊழலுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட சட்ட ரீதியான பல அணுகுமுறைகள் இதற்கு பல உதாரணங்களாகும்.

எனினும், ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வந்த சந்தர்ப்பத்தில் தற்போது ஜனாதிபதியாகவும் அப்போது ஜனாதிபதி வேட்பாளராகவும் இருந்த அநுரகுமார திசாநாயக்க தமிழ் மக்களுக்கென பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தார்.

எனினும், தற்போது நாட்டில் அரங்கேறும் பல விடயங்களை உற்று நோக்கும் போது தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அநுர அரசாங்கம் மறந்து விட்டதா என்றொரு சந்தேகம் எழுந்துள்ளது.

திருகோணமலை சம்பவமாக இருக்கட்டும், மட்டக்களப்பில் அரங்கேறிய தொல்லியல் திணைக்களம் தொடர்பான சர்ச்சையாக இருக்கலாம் இவை அனைத்தும் தமிழர்களுக்கு எதிராக அரசாங்கத்தின் செயற்பாடுகளை வெளிப்படுத்துகின்றன.

No comments: