News Just In

11/07/2025 09:04:00 AM

யாழில் திடீர் சுற்றிவளைப்பு; போதைப்பொருள், ஆயுதங்களுடன் சிக்கிய 09 பேர்

யாழில் திடீர் சுற்றிவளைப்பு; போதைப்பொருள், ஆயுதங்களுடன் சிக்கிய 09 பேர்




யாழ்ப்பாணத்தில் கூரிய ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு தினங்களில் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர்.

கூரிய ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு பேரும் பகுதி பகுதியாக ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் எழு பேரும் என ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.

கைதான சந்தேகநபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த யாழ்ப்பாணம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

No comments: