News Just In

10/17/2025 01:54:00 PM

உயிரிழந்த கால்பந்தாட்ட வீரர் மைதானத்தில் அடித்த இறுதி ‘கோல்; இறுதிச்சடங்கில் மனதை உருக்கிய சக வீரர்களின் செயல்


உயிரிழந்த கால்பந்தாட்ட வீரர் மைதானத்தில் அடித்த இறுதி ‘கோல்; இறுதிச்சடங்கில் மனதை உருக்கிய சக வீரர்களின் செயல்!


யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த வடமராட்சி கிழக்கை சேர்ந்த பிரபல கால்பந்தாட்ட வீரர் யூட் மெரினின் இறுதிச் சடங்கு நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் நேற்று இடம்பெற்றது.

கால்பந்தாட்ட வீரரின் பூதவுடல் அவரின் வீட்டில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு உடுத்துறை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அப்போது மைதானத்தில் குறித்த வீரரின் பூதவுடலால் செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் இறுதிக்கோல் அடிக்கப்பட்டது. இதன்போது சக வீரர்கள் அவருக்கு இரு பக்கமும் நின்று முழறந்தாளிட்டு மரியாதை செய்தனர்.

அதன்பின்னர் வீரரின் பூதவுடல் புனித அந்தோனியார் ஆலயத்திற்கு இரங்கல் திருப்பலிக்காக கொண்டு செல்லப்பட்டது. அதனை தொடர்ந்து தாழையடி புனித அந்தோனியார் ஆலய சேமக்காலையில் யூட் மெரினின் பூத உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

இறுதிச் சடங்கில் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், மற்றும் இலங்கை முழுவதும் இருந்து பிரபல கால்பந்தாட்ட வீரர்கள் வீராங்கனைகள், இளைஞர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

மைதனாத்தில் வைத்து குறித்த வீரரின் பூதவுடலால் இறுதிக் கோல் அடிக்க வைத்த சகவீரர்களின் செயல் அனைவரது மனதையும் உருக வைத்துள்ளது. இளைஞரின் இழப்பைத் தாங்க முடியாத பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், வீரர்கள் உள்ளிட்டோருக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்

No comments: