News Just In

10/19/2025 04:07:00 PM

சமாதானத்தைக் கட்டியெழுப்புதலும் சமூக ஒருங்கிணைவும் சமூகத்தினருக்கான கலந்துரையாடல் அமர்வு

சமாதானத்தைக் கட்டியெழுப்புதலும் சமூக ஒருங்கிணைவும் சமூகத்தினருக்கான கலந்துரையாடல் அமர்வு


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

சமாதானத்தைக் கட்டியெழுப்புதலும் சமூக ஒருங்கிணைவும் எனும் தொனிப் பொருளில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியதாக சமூகத்தினருக்கான கலந்துரையாடல் அமர்வு மட்டக்களப்பு – தன்னாமுனை மியானி பயிற்சி நிலையத்தில் சனிக்கிழமை இடம்பெற்றது.

ஏற்கெனவே சமாதான சகவாழ்வு நல்லிணக்க செயற்பாடுகளுடன் தொடர்புபட்டவர்கள் இன, சமய, பால், வயது அடிப்படையில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களிலிருந்து கலப்பு பங்குபற்றுநர்களாக 27 பேர் இந்த கலந்துரையாடல் அமர்வுக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள்.

தந்தை செல்வா நினைவு அறக்கட்டளையினால் அமுல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கிழக்குமாகாணத்திற்கான முதலாவது கலந்துரையாடல் அமர்வாக இது இருந்தது.

சமூக மட்டத்தில் அமைதியைக் கட்டியெழுப்புதல்;, சமூக ஒருங்கிணைப்பு, புரிந்துணர்வு, விழிப்புணர்வு ஆகிய நோக்கங்களைக் கொண்ட சமூகத்தினருக்கான கலந்துரையாடல் பயிற்சிநெறி, நிபுணத்துவ ஆலோசகர் றோச் ஸ்ரான்லி பிரபாகரனால் வடிவமைக்கப்பட்டிருந்தது.

கலந்துரையாடல் இலகுபடுத்துநர்களாக ஏ.எச்.ஏ. ஹுஸைன், ஏ.டபிள்யூ. யூ. நபீஸா, சுஹைனா முஹைதீன் கே. பிரகலாதன், எஸ்.எம். சாத்;, ஐ.எல். ஹாசிம், பொன்னையா யோகேஸ்வரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கலந்துரையாடல் அமர்வில் தந்தை செல்வா நினைவு அறக்கட்டளையின் பிரதம அறங்காவலர் எஸ்.சி.சி. இளங்கோவன், திட்ட வளவாளர் எஸ். திலீபன், திட்ட சிரேஷ்ட இணைப்பாளர். ஐ. சுதாவாசன், கே. நிர்மலரூபன் ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.

செயலமர்வின் நிறைவில் பயிற்சி நிபுணத்துவ ஆலோசகர் றோச் ஸ்ரான்லி பிரபாகரன் பங்குபற்றுநர்களை விழித்துக் கருத்துத் தெரிவித்தார்.

“இங்கு பங்குபற்றியவர்களில் அனுபவஸ்தர்கள் வெறுமையாக வரவில்லை முரண்பாடு, சமாதானம் சம்பந்தப்பட் விடயங்களில் ஒரு அனுபவத்தோடு வந்திருக்கின்றீர்கள். நமக்குள் மன வடுக்கள் இருக்கின்றன. இழப்புக்கள் இருக்கின்றன.

எங்களது அடையாளத்தில் மன வடு என்பது ஒரு அம்சம், அதேநேரம் நாங்கள் ஆற்றலையும் கொண்டிருக்கின்றோம், திறமை உடையவர்களாகவும் இருக்கின்றோம். எனவே இவற்றை ஒருங்கிணைத்து நாம் சமாதானத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.” என்றார்.

நிகழ்வின் நிறைவில் தந்தை செல்வா கலையரங்க அறக்கட்டளையின் நம்பிக்கையாளர் சபை பிரதம அறங்காவலர் எஸ்.சி.சி. இளங்கோவன் தந்தை செல்வா கலையரங்க அறக்கட்டளையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக சேவைச் செயற்பாடுகள், அதன் எதிர்காலச் செயற் திட்டங்கள் குறித்து பங்குபற்றுநர்களிடம் விவரித்தார்.

“இந்த வேலைத் திட்டத்தை நாங்கள் தொடங்கியதன் நோக்கம், இந்த நாட்டில் 30 வருட காலமாக யுத்தம் நடந்தது. அதேவேளை, கிழக்கு மாகாணத்தில் கடுமையான இன மோதல் இடம்பெற்றது. பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் ஏதோ ஒரு விதத்தில் மன வடுக்கள் இருக்கின்றன. இன்றுவரை தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகத்தினர் மத்தியில் கடுமையான முரண்பாடுகளும் பிரச்சினைகளும் உள்ளன.

பொதுவான இடங்களில் இனங்களாக இணைவோம். ஆனால், பிரச்சினை என்று ஒன்று வந்தால் நாங்கள் எதையும் இழந்து பாதிக்கப்பட்டு விடுவோம் என்பதனால் பயந்து போய் தனித்து இருப்போம். ஆகவே, சமூகங்களுக்கிடையில் இன்னமும் உண்மையான சமாதானம் உள்ளார்ந்த ரீதியில் மலரவில்லை என்பதுதான் உண்மை.

ஒருபோதும் வெளியிலிருந்து சமாதானத்தைக் கொண்டு வர முடியாது. முஸ்லிம் சமூகத்தை வடக்கிலிருந்து வெளியேற்றியமை தொடர்பாகவும் கசப்பான விடயங்கள் உள்ளன. வடமாகாணத்தில் முஸ்லிம்களும், சிங்கள மக்களும் சிறுபான்மையினராக இருக்கிறார்கள். அவர்களை வடமாகாணத்தில் பெரும்பான்மையாக உள்ள தமிழ் சமூகம் எவ்வாறு உள்வாங்கும் என்ற விடயமும் கரிசனைக்கு வரவேண்டும். யுத்தம் தொடர்பான விடயங்கள், வடபகுதி தமிழ் சமூகத்திற்குள்ளேயே நிலவும் உள் முரண்பாடுகள், சாதியம் தொடர்பான சர்ச்சைகள், இயக்க விடயங்கள், அரசியல் சார் நிலைப்பாடுகள், யுத்தம் தொடர்பான வடுக்கள் இவையெல்லாம் கதைக்கப்பட வேண்டும்.

இவற்றைப் பேசிப்பார்ப்பதற்கான தளம் ஒன்றை அமைக்க வேண்டும், அதன் மூலமாக நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டே இந்த வேலைத் திட்டத்தைத் தொடங்கினோம்.

இவைகள் உளம் சார்ந்த பிரச்சினைகள். மேற்கத்தேய நாடுகள் சமத்துவமான நாகரீக சமூகம் என்று அவர்கள் தங்களைக் கூறிக் கொண்டாலும் இப்போது பார்த்தால் அந்த நாடுகளில்தான் கடுமையான இனவாதம் வளர்ந்து கொண்டிருக்கிறது.

எங்களது நோக்கம், எங்களது இளம் சந்ததியினருக்கு சிறந்ததொரு சமாதான எதிர்காலத்தை நாங்கள் உருவாக்கி அவர்களிடம் கையளிக்க வேண்டும் என்பதேயாகும். அந்த மகோன்னத பணியின் ஊக்கிகளாக நீங்களும், நாங்கள் இருக்க வேண்டும் என்பதே அவா. இதில் நீங்களும் நாங்களும் பங்காளர்களாக இருக்க முடியும்” என்றார்.

நிகழ்வில் தந்தை செல்வா நினைவு கலையரங்க அறக்கட்டளையின் திட்ட வளவாளர் எஸ். திலீபன், கிளிநொச்சியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள சமாதானக் கலையரங்கத்தைப் பற்றி பங்குபற்றுநர்களுக்குத் தெரியப்படுத்தினார்,

சமாதானம் தொடர்பாக சிந்திக்கின்ற முறைமைகளை உருவாக்குவதற்கான கலந்துரையாடலுக்கான ஒரு களம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. அந்தக் களத்தை நீங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சமாதானம் தொடர்பான எண்ணங்கள், சிந்தனைகள், பிரதிபலிப்புக்களை நீங்கள் அங்கே கண்டு கொள்ளலாம். அந்தக் களத்தை, சமாதானத்தை நோக்கிய உங்கள் சிந்தனைகளுக்கு உயிரூட்டும் இடமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு உங்களை வரவேற்கின்றோம். சிறிலங்கா பீஸ் கலரி என்றுதான் அந்தக் களத்தை மேம்படுத்தி இருக்கின்றோம்.” என்றார்.

கடந்த கால யுத்த சூழ்நிலைகள் ஏற்படுத்திய பாதிப்புக்களிலிருந்து தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் எல்லா சமூகத்தவர்களையும் மீட்டெடுப்பதற்கு சமாதானத்தை நோக்கிய முன்னெடுப்பு அவசியம் என உணர்ந்தமையால்தான் இந்த சமாதான செயற்பாடுகளில் தங்களை அர்ப்பணித்துள்ளதாக பங்குபற்றுநர்கள் தெரிவித்தனர்.

யுத்தம் முடிந்திருக்கின்றபோதும் இன்றுவரை உண்மையான சமாதானம் வரவில்லை என்பதால் அதனை ஏற்படுத்தி எல்லா சமூகங்களோடும் இணைந்து வாழ வழிவகை கண்டாகப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

யுத்தப் பாதிப்புக்களைக் கண்டிராத இளையோரையும் சமாதானத்தின் பால் அழைக்க வேண்டும்.

இன்று உலகில் இல்லாதது சமாதானம் ஆனால், சமாதானமின்றி உலகில் யாருமே வாழ முடியாது என்ற உண்மையை உலகறியச் செய்ய வேண்டும்.

கடந்த கால இன வன்முறைகள்

No comments: