News Just In

9/09/2025 04:07:00 PM

புற்றுநோய்க்கான Enteromix தடுப்பூசி தயார்! ரஷ்யா வெளியிட்ட நம்பிக்கை தரும் முடிவு


புற்றுநோய்க்கான Enteromix தடுப்பூசி தயார்! ரஷ்யா வெளியிட்ட நம்பிக்கை தரும் முடிவு



ரஷ்ய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் புற்றுநோயை தடுக்கும் புதிய தடுப்பூசிகளை கண்டுபிடித்து இருப்பதாக அறிவித்துள்ளனர்.
புற்றுநோயை தடுக்கும் Enteromix தடுப்பூசி

புற்றுநோயை தடுக்கும் Enteromix தடுப்பூசி மனித சோதனைகளில் குறிப்பிடத்தக்க வெற்றி முடிவுகளை கொண்டிருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

அதேசமயம் இந்த Enteromix தடுப்பூசிகள் 100% பாதுகாப்பானது மற்றும் செயல்திறன் கொண்டது எனவும் ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.

Enteromix தடுப்பூசி தொடர்பான மனித சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டவர்களின் புற்றுநோய் கட்டிகள் சுருங்கி குணமடைந்ததுடன், எந்தவொரு பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தவில்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த Enteromix தடுப்பூசியானது mRNA தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி வழக்கமான புற்றுநோய் தடுப்பூசிகளிலிருந்து இரண்டு முக்கிய வேறுபாடுகளை கொண்டுள்ளது.

இந்த Enteromix தடுப்பூசி ஒவ்வொரு புற்றுநோய் கட்டிகளுக்கு ஏற்றவாறு தனித்துவமாக உருவாக்கப்படுகிறது.

இந்த தடுப்பூசிகள் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு புற்றுநோய் செல்களை எதிர்க்கும் திறனை கற்றுக் கொடுக்கிறது.

மேலும் இந்த சிகிச்சை இலக்கு சார்ந்ததாக இருப்பதால் தடுப்பூசியை பயனுள்ளதாக மாற்றுகிறது.



இந்த mRNA தொழில்நுட்பம் விரைவான வளர்ச்சி மற்றும் மாற்றியமைக்கும் திறனை ஊக்குவிக்கிறது.

இதனால் இந்த தடுப்பூசி பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க முடியும்.

No comments: