கச்சதீவு விவகாரம் இலங்கையில் பேசுபொருளாகியுள்ள நிலையில் ஜனாதிபதி அநுரகுமாரதிசாநாயக்கவின் கச்சைதீவு விஜயமானது இலங்கையை மட்டுமன்றி இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயின் மதுரை மாநாட்டில் கச்சதீவு விவகாரம் பேசப்பட்டதையடுத்து இலங்கையிலுள்ள அரசியல் தலைவர்கள் சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள்.
இந்தநிலையில், வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதியொருவர் கச்சதீவிற்கு விஜயம் செய்துள்ளமையானது அரசியல் உள்நோக்கத்தை கொண்டதாகவும், இந்த பிராந்தியத்தில் ஒரு கொதிநிலையை உருவாக்கும் செயன்முறை என்று பிரித்தானியாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்தார்.
No comments: