காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது -உண்மையைக் கண்டறிவதில் அரசு அக்கறை! ஜனாதிபதி தெரிவிப்பு
வடக்கு மக்களின் காணி உரிமைகள், மொழி மற்றும் கலாசார உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், காணாமல்போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் உரிமையைப் பாதுகாப்பதற்கும் அரசு அர்ப்பணிப்புடன் உள்ளது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
உலக தெங்கு தின நிகழ்வுகளுடன் இணைந்த வகையில், "நாடே சுபீட்சம் - ஆக்கும் விருட்சம் - கற்பகத்தரு வளம்" என்ற தொனிப்பொருளின் கீழ் நேற்று(2) முற்பகல் புதுக்குடியிருப்பு நகரில் நடைபெற்ற வடக்கு தெங்கு முக்கோண ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்றார்.அங்கு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"வடக்குக்கு மீண்டும் உயிரோட்டத்தை வழங்குவதன் மூலம் இந்த மக்களுக்கு வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் பொறுப்பை நிறைவேற்றுவேன்.
தேசிய ஒற்றுமையை உருவாக்குவதே எமது அரசின் நோக்கமாகும். அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்" என்றார்.
9/03/2025 09:11:00 AM
Home
/
Unlabelled
/
காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது -உண்மையைக் கண்டறிவதில் அரசு அக்கறை! ஜனாதிபதி தெரிவிப்பு
காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது -உண்மையைக் கண்டறிவதில் அரசு அக்கறை! ஜனாதிபதி தெரிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments: