News Just In

9/02/2025 03:55:00 PM

ஏறாவூர்கரப்பந்தாட்ட போட்டியில். தாமரைக்கேணி வோர் ணஸ்அணி சாம்பியன் கிண்ணத்தை பெற்றுக் கொண்டது.


ஏறாவூர்கரப்பந்தாட்ட போட்டியில். தாமரைக்கேணி வோர் ணஸ்அணி சாம்பியன் கிண்ணத்தை பெற்றுக் கொண்டது.



(மட்டக்களப்புமொகமட் தஸ்ரிப் லத்தீப்)

ஏறாவூர்தாமரைக் கேணி உதவும் கரங்கள் விளையாட்டுக் கழகத் தினர். விளையாட்டு திணைக்களத்தின்அனுசரனையில் நடத்திய சினேகபூர்வ கரப்பந்தாட்ட சுற்று போட்டி. தாமரைக் கேணி தோணாமைதானத்தில் நடைபெற்றது.

விளையாட்டு கழகத்தின் தலைவர் எம்.சி எம்.ரிபான் தலைமையில் நடைபெற்ற இந்த சுற்றுப்போட்டியில்.ஏறாவூர் பிரதேசத்தை சேர்ந் தஎட்டு அணிகள். பங்கேற்றன. அணிக்கு ஆறு பேர் என்ற அடிப் படை யில் இந்த சுற்று போட்டி நடைபெற்றது.

இறுதிப் போட்டிக்கு. தாமரைக்கேணி கிங்ஸ் பிளாஸ்டர் விளை யாட்டு கழகமும். வோர்நஸ் விளையாட்டு கழகமும் மோதிக் கொண்டன. முதல் சுற்றில் ட்டில் 15 க்கு 13 புள்ளிகளையும். இரண்டாம் சுற்றில்15 க்கு 11 என்ற புள்ளிகளை பெற்று. தாம ரைக்கேணி வோர்ணஸ்அணியினர் சாம்பியன் கிண்ணத்தை தட்டிக் கொண்டனர்.

இந்நிகழ்வில் தேசிய மக்கள் அமைப் பாளரும். விவசாய நீர்ப் பாசன கால்நடை அபிவிருத்தி அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளருமான கே திலகநாதன் சிறப்பு அதிதியா கலந்து கொண்டு. வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வைத்தார்

No comments: