அரச தீர்மானங்கள் அடிமட்டக் கிராமங்களில் எவ்வாறானா தாக்கங்களை ஏற்படுத்துகின்றது என்பதை புலனாய்வு அடிப்படையில் பொதுத் தளத்திற்குக் கொண்டு வரவேண்டும்
ஊடகவியலாளர்களுக்கு சட்ட நடைமுறைகள் பற்றிய செயலமர்வில் சட்டத்தரணி ஐங்கரன்.
தேசிய மட்டத்தில் எடுக்கப்படுகின்ற அரச தீர்மானங்கள் கிராம அடிமட்டங்களில் எவ்வகையான தாக்கங்களை ஏற்படுத்துகின்றது என்பதை புலனாய்வு அடிப்படையில் ஆய்வு செய்து ஆதாரங்களோடு பொது வெளிக்குக் கொண்டு வர வேண்டும் என பிரபல சட்டத்தரணி ஏ. ஐங்கரன் தெரிவித்தார்.
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வில் வளவாளராகக் கலந்து கொண்டு சமகால நிகழ்வுகளின் தாற்பரியங்களை அவர் தெளிவுபடுத்தினார்.
கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட, சமகாலத்திலும் எடுக்கப்படுகின்ற அரசியல் தீர்மானங்கள் மக்களின் வாழ்வியல் முறைமைகள், சிந்தனைகள், செயல்பாடுகளில் எவடவாறான தாக்கத்தைச் செலுத்துகின்றன, அவற்றின் சாதக பாதங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் துல்லியமாகத் தெளிவு பெற்றிருக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் அவர் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் அமுலாக்கம் செய்யப்படும்போது அவை மக்களின் வாழ்வியல் முறைமைகளில் ஏற்படுத்தும் தாக்கங்களை அலசி ஆராய்ந்து தெளிவுபடுத்த வேண்டியதன் தார்மீகப் பொறுப்பு ஊடகவியலாளர்களுக்கு உண்டென்றும் தெளிவுபடுத்தினார். எது உண்மையோ நியாயமோ தர்மமோ அதையே தார்மீகக் கடமையாகக் கொண்டிருக்கும் பொறுப்பு ஊடகவியலாளருககு உண்டென்றும் அவர் கூறினார்.சட்ட நடைமுறைகள் தொடர்பிலும் அவர் தெளிவு படுத்தினார்.
இந்நிகழ்வில் அபிவிருத்தியை நோக்கிய கண்ணோட்டத்தில் பால்நிலை நோக்கில் பேசப்படாத ஆனால் கட்டாயம் பேசப்பட வேண்டிய இவ்வாண்டின் 7வது “சர்வதேச மாண்புடன் கூடிய மாதவிடாய் தினத்”துடன் தொடர்புபட்ட விடயங்கள் பற்றி வளவாளரும் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் திருகோணமலை மாவட்ட உத்தியோகத்தருமான இதயராணி சித்திரவேல் தெளிவூட்டினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஊடகவியலாளர்களும் ஊடகக் கற்கை மாணவர்களும் என சுமார் 30 பேர் கலந்து கொண்டனர்.
விழுது ஆற்றல் மேம்பாட்டு மைய மட்டக்களப்பு மாவட்ட நிருவாக அலுவலர் கே. நிர்மலா, அலுவலர் பி. சினேக்கா ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொணடிருந்தனர்.
No comments: