News Just In

9/03/2025 08:08:00 PM

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று



தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்றிரவு வெளியிடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 10 ஆம் திகதி நடைபெற்றது.

நாடு முழுவதும் 2,787 மையங்களில் புலமைப்பரிசில் பரீட்சை நடைபெற்றது.

இதேவேளை, இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்து ஏழாயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்தொன்று ஆகும்.

No comments: