பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 177 வாக்குகள் கிடைத்ததோடு அதற்கு எதிராக எந்தவொரு வாக்கும் அளிக்கப்படவில்லை.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வாக்களிப்பில் இருந்து விலகியிருந்தார்.
இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்த பின்னர், அரசியலமைப்பு சபைக்கு, பொலிஸ் மா அதிபர் பதவிக்கான பெயரை, ஜனாதிபதி பரிந்துரைக்க உள்ளார்.
தேசபந்து தென்னகோனை விசாரித்த குழுவின் அறிக்கையை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தாக்கல் செய்தபோது, அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் குற்றவாளி என சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தெரியவந்தது.

அதன்படி, தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட குழு ஒருமனதாக பரிந்துரைத்தது.

No comments: