கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தின் 18ஆவது அதிபராக ரீ.கே.எம். சிராஜ் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் அவர்களிடம் இருந்து இன்று 2025.08.22 நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.
கடந்த 2025.02.24 ஆம் திகதி நடைபெற்ற நேர்முகப்பரீட்சையின் அடிப்படையில் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளரினால் சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தின் 18வது அதிபராக ரீ.கே.எம். சிராஜ் அவர்கள் நியமிக்கப்பட்டு கல்முனை கல்வி வலய வலயக் கல்விப் பணிப்பாளரிடம் இருந்து கடிதத்தை பெற்றுக் கொண்டார்.
நீண்டகாலம் பிரதி அதிபராகவும் கடந்த ஒரு வருட காலமாக பதில் அதிபராகவும் குறித்த பாடசாலையில் செயற்பட்டு வந்த ரீ.கே.எம். சிராஜ் அவர்களுக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: