News Just In

8/08/2025 06:09:00 PM

உகந்தமலை முருகன் ஆலய சமுத்திர தீர்த்தோற்சவம்

உகந்தமலை முருகன் ஆலய சமுத்திர தீர்த்தோற்சவம்




வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தைமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சமுத்திர தீர்த்தோற்சவம் இன்று காலை 9.00 மணியளவில் நடைபெற்றது.

தீர்த்தம் ஆடுவதற்காக தற்போது சுமார் ஆறாயிரம் அடியார்கள் ஆலய வளாகத்தில் வந்து சேர்ந்திருப்பதாக ஆலய வண்ணக்கர் சுதுநிலமே சுதா தெரிவித்தார்.

கடந்த 25 ஆம் திகதி கொடியேற்ற நிகழ்வுடன் ஆரம்பமாகிய இவ் வருடாந்த மகோற்சவம் ஆலயபிரதம குரு சிவசிறி க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் நடைபெற்று வந்தது.

கொடியேற்றம் தொடங்கி தொடர்ச்சியாக 15 நாட்கள் திருவிழாக்கள் இடம்பெற்று இன்று சமுத்திரத்தில் தீர்த்த உற்சவம் இடம் பெற்றது.

உற்சவ காலங்களில் போக்குவரத்து மற்றும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டடிருந்தது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்

No comments: