News Just In

8/22/2025 12:59:00 PM

வைத்தியசாலைகளுக்கு அமைச்சின் செயலாளரினால் கணனி மற்றும் உபகரணங்கள் கையளிப்பு

வைத்தியசாலைகளுக்கு அமைச்சின் செயலாளரினால் கணனி மற்றும் உபகரணங்கள் கையளிப்பு


நூருல் ஹுதா உமர்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்கு நேற்று (21) விஜயம் செய்த கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபள்யூ.ஜீ.திசாநாயக்க அவர்கள் பிராந்தியத்தில் உள்ள சில வைத்தியசாலைகளுக்கு கணனி உள்ளிட்ட உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் எஸ்.கரன், நிருவாக உத்தியோகத்தர் எஸ்.எம்.றியாஸ், பிராந்திய பிரிவு தலைவர்கள், வைத்தியசாலைகளின் பொறுப்பு வைத்திய அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை சுகாதார அமைச்சின் செயலாளர் பிராந்திய பணிமனையின் சில பிரிவுகளுக்கும் சென்று நிலமைகளை பார்வையிட்டார்

No comments: