News Just In

8/22/2025 01:03:00 PM

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் முன்னிலையில் கல்முனை பிராந்திய மருத்துவ முகாம் தொடர்பான கலந்துரையாடல்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் முன்னிலையில் கல்முனை பிராந்திய மருத்துவ முகாம் தொடர்பான கலந்துரையாடல்


நூருல் ஹுதா உமர்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு, அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களின் ஒத்துழைப்புடன் கல்முனை பிராந்தியத்தில் இலவச மருத்துவ முகாம் ஒன்றை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பில் கலந்துரையாடலொன்று நேற்று (21) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ.திசாநாயக்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் எஸ்.கரன், நிருவாக உத்தியோகத்தர் எஸ்.எம்.றியாஸ், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரிவு தலைவர்கள், சுகாதார அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களின் தலைவர்கள், மருத்துவ முகாமுடன் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பொத்துவில் கோமாரி மற்றும் திருக்கோவில் பிரதேச மக்களின் நலன் கருதி தாண்டியடி பிரதேசத்தில் குறித்த மருத்துவ முகாமை நடாத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டு, சுகாதார அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் குறித்த இடங்களுக்கு சென்று பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது

No comments: