கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயத்தில் தொற்றா நோய் தடுப்பு பரிசோதனை நிகழ்வு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையிலும் வழிகாட்டலிலும் இடம்பெற்றது.
இதன்போது சாய்ந்தமருது எம். எஸ். காரியப்பர் வித்தியாலயத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தொற்றா நோய் தடுப்பு பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிகழ்வின் போது, அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு குருதிச் சீனி பரிசோதனை, உடல் அழுத்த பரிசோதனை மற்றும் உடல் நிறை மதிப்பு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சீரான உணவு முறை, மற்றும் நீண்ட நாள் நோய்களை தடுக்கும் வழிமுறைகள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தைச் சேர்ந்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள் மற்றும் டெங்கு தடுப்பு பணியாளர்கள் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து இம்முறை ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களுக்கு, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியினால் பேனாக்கள் வழங்கப்பட்டதுடன் பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களுக்கு முன்னேற்றத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும் வகையில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ஊக்கமளிக்கும் வகையில் உரையையும் நிகழ்த்தினார்.

No comments: