
உலகில் தட்டம்மை நோயை கட்டுப்படுத்திய நாடுகளின் வரிசையில் இடம்பெற்றுள்ள கனடா அந்த அந்தஸ்தினை இழக்கக்கூடிய அபாயம் உருவாகியுள்ளது.
அண்மைய நாட்களாக கனடாவில் தட்டம்மை நோய் பரவுகை தொடர்பிலான பல்வேறு தகவல்கள் பதிவாகியுள்ளன.
கடந்த ஆண்டில் நியூபிரவுன்ஸ்விக் பகுதியில் முதலில் தட்டம்மை நோயாளி பதிவாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து பல்வேறு நோயாளிகள் பதிவாகியிருந்தனர்.
தட்டம்மை நோயை இல்லாதொழித்த நாடுகளின் வரிசையில் கனடா 1998ம் ஆண்டு இடம்பிடித்திருந்தது.
கடந்த 2024ம் ஆண்டுக்கு முன்னதாக வருடாந்தம் சராசரியாக 91 பேர் தட்டம்மை நோயினால் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
எனினும் கடந்த ஆண்டு முதல் தட்டம்மை நோயத் தொற்றாளர் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரிப்பினை பதிவு செய்து வருகின்றது.
குறிப்பாக கடந்த ஆண்டு முதல் இதுவரையில் சுமார் 4394 பேர் தட்டம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வைரஸ் தொற்று பரவுகையினால் பலர் பாதிக்கப்பட்டதாகவும், தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments: