News Just In

8/07/2025 01:35:00 PM

1,408 மருத்துவர்களுக்கு நியமனம் வழங்க சுகாதார அமைச்சு முடிவு

1,408 மருத்துவர்களுக்கு நியமனம் வழங்க சுகாதார அமைச்சு முடிவு



ஆரம்ப தர மருத்துவ அதிகாரிகளாக பயிற்சிகளை நிறைவுசெய்த 1,408 மருத்துவர்களுக்கு நியமனம் வழங்க சுகாதார அமைச்சு விண்ணப்பங்களை கோரியுள்ளது.

2024 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பயிற்சியை முடித்த, உரிய தகுதிகளைப் பூர்த்தி செய்த மருத்துவர்கள், அமைச்சின் மனிதவள முகாமைத்துவ மற்றும் தகவல் அமைப்பு ஊடாக விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் என்று சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் எச்.எம். அர்ஜுன திலகரத்ன அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் 11 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு முன்னதாக தங்கள் விண்ணப்பங்களை இணையத்தளம் வழியாக சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: