News Just In

8/25/2025 02:13:00 PM

ரணிலுக்கு நாளையும் ஜாமீன் கிடைக்காது! வாழ்த்துக்கள் தெரிவித்த துமிந்த நாகமுவ


ரணிலுக்கு நாளையும் ஜாமீன் கிடைக்காது! வாழ்த்துக்கள் தெரிவித்த துமிந்த நாகமுவ



அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தால்,

26 ஆம் திகதியும் அவருக்கு ஜாமீன் கிடைத்திருக்காது என்று முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்தார்.

அதே சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தனது கட்சி உறுப்பினர் வசந்த முதலிகே கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதாகவும் ,

அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை என்றும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இதேபோன்ற நிலைமை தான் எனவும் காரணத்தை அவர் குறிப்பிட்டார்.

மேலும் ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டதற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த அவர்,

பட்டலந்த சித்திரவதை சம்பவத்திற்கு எதிராக உடனடியாக குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதற்குத் தனது தரப்பிலிருந்து ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

No comments: