News Just In

8/04/2025 12:36:00 PM

சாய்ந்தமருது லீடர் அஷ்ரபில் தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு !

சாய்ந்தமருது லீடர் அஷ்ரபில் தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு !



தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தில் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவின் ஏற்பாட்டில் அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் அனுசரணையில் இன்று (04) நடைபெற்றது.

இக்கருத்தரங்கை ஆரம்பித்து வைப்பதற்காக பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். சம்சுதீன், பாடசாலை உதவி அதிபர் எம்.எப்.எம்.ஆர்.ஹாதிம் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவின் செயலாளர் யூ.எல். நூருல் ஹுதா போன்றோர் கலந்து கொண்டனர்.

இச்செயலமர்வை அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் பொருளாளர், பிரபல சிங்கள பாட வளவாளர் எல்.எம். நிப்ராஸ் வளவாளராக கலந்து கொண்டு வழிநடத்தினார்

கல்முனை கல்வி வலயத்தில் மிகக்குறுகிய காலத்தில் பாரியளவிலான முன்னேற்றத்தை அடைந்து வரும் சாய்ந்தமருது கோட்ட லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தில் இருந்து அதிக மாணவர்களை வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற வைக்க பாடசாலை சமூகம் முன்னெடுத்துவரும் தொடர் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக இடம்பெற்ற இந்த கருத்தரங்கில் மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: