News Just In

7/22/2025 05:17:00 PM

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணை குற்றவியல் விசாரணை பிரிவுக்கு (CID) மாற்றம்!

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணை குற்றவியல் விசாரணை பிரிவுக்கு (CID) மாற்றம்!



யாழ். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் நேற்று முதல் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நேற்றையதினம் (21) மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் போது பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் அகழ்வாய்வுத் தளத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்ட விடயத்தை தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

அகழ்வாய்வின் முதல் நாளில் மேலும் ஏழு எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்தார்.

அத்துடன் யாழ்ப்பாண பொலிஸாரினால் நடத்தப்பட்ட நீதித்துறை நடவடிக்கைகள் குற்றவியல் விசாரணை பிரிவுக்கு (CID) மாற்றப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி தெரிவித்தார்.

ஏற்கனவே நடைபெற்ற அகழ்வாய்வு மூலம் 65 என்புக்கூட்டுத் தொகுதிகள்மீட்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் நேற்றையதினம் புதிதாக ஏழு எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு, இதுவரையில் 72 பேரின் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 06ஆம் திகதி திறந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: