News Just In

7/08/2025 05:37:00 AM

பத்தாவது தேசிய காயங்கள் தடுப்பு வாரத்தை முன்னிட்டு வீதி பாதுகாப்பு தின விசேட விழிப்புணர்வு நிகழ்வு

பத்தாவது தேசிய காயங்கள் தடுப்பு வாரத்தை முன்னிட்டு வீதி பாதுகாப்பு தின விசேட விழிப்புணர்வு நிகழ்வு


நூருல் ஹுதா உமர்

2025 ஆம் ஆண்டு பத்தாவது தேசிய காயங்கள் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு, இன்று (07) "வீதி பாதுகாப்பு தினம்" எனும் கருப்பொருளின் கீழ், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும், சாய்ந்தமருது பொலிஸ் நிலையமும் இணைந்து, விசேட விழிப்புணர்வு நடவடிக்கையை சாய்ந்தமருது பிரதேசத்தில் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்வில், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர்கள், டெங்கு களத்தடுப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் சாய்ந்தமருது பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்வின் போது, சுகாதார உத்தியோகத்தர்களும் பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து, அதிவேகமாக செலுத்தப்பட்ட வாகனங்கள், வீதி போக்குவரத்து சட்டங்களை மீறி இயக்கப்பட்ட வாகனங்கள், தலைக் கவசமின்றி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர்கள், வாகன ஓட்டும் போது கைபேசியை பயன்படுத்திய ஓட்டுனர்கள் என்பவர்களைத் தடுத்து நிறுத்தி, அவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வும் ஆலோசனைகளும் வழங்கினர்

No comments: