News Just In

7/23/2025 11:41:00 AM

போசாக்குக் குறைவான நலிவுற்ற சிறுபிள்ளைகளின் எதிர்கால நலன் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு!

 போசாக்குக் குறைவான நலிவுற்ற சிறுபிள்ளைகளின் எதிர்கால நலன் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு!







அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள போசாக்குக் குறைவான
நலிவுற்ற, வயதுக்கேற்ற நிறைகூடாத மற்றும் உயரமில்லாத சிறுபிள்ளைகளின் எதிர்கால நலனை கருத்திற்கொண்டு அவர்களின் ஊட்டச்சத்துக்களை ஊக்குவிக்கும் நோக்கில் அப்பிள்ளைகளின் தாய்மார்களுக்கு தெளிவூட்டம் கருத்தரங்கு அட்டாளைச்சேனை பெரிய ஜும்மா பள்ளிவாசல் கலாச்சார மண்டபத்தில் (22) இடம்பெற்றது.

அட்டாளைசேனை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எம்.எம்.இஸ்ஸதீன் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தரங்கு அட்டாளைச்சேனை பிரதேச தாய்மார் ஆதரவு கழகங்களின் ஊடாக அமுல்படுத்தப்பட்டது. இதில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தாய், சேய் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் றிப்ஸின் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள், தாய்மார் கழகங்களின் உறுப்பினர்கள், குறித்த பிள்ளைகளின் தாய்மார்கள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

சிறுவர்களின் எதிர்கால வாழ்வு மற்றும் ஏனைய பிள்ளைகளுடன் சமாந்தரமாக வாழவேண்டும் என்பதற்காக அவர்களை எவ்வாறு பராமரித்துக் கொள்ளவேண்டும், அவர்களுக்கான சத்துமா உணவுகளை எவ்வாறு தயாரிக்க வேண்டும், அதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பயன்பாடுகள் பற்றி மிகத் தெளிவான விளக்கங்களை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எம்.எம்.இஸ்ஸதீன் வழங்கி வைத்தார்.

இவ்வாறான நடைமுறைகளை தாய்மார்கள் பின்பற்றி செயற்படுவதன் மூலம் இச்சிறுவர்களின் செயற்பாடுகள் சிறப்பானதாக அமைவதுடன் அவர்களின் எதிர்கால வாழ்வும் மிகச் சிறப்பாக அமைகின்ற அதேவேளை, ஏனைய பிள்ளைகளுடன் சமாந்தரமாக வாழ்வதற்கும் இது வழிவகுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, இன்றைய கருத்தரங்கில் கலந்து கொள்ளாத தாய்மார்களுக்கு இது தொடர்பான விளக்கங்களை இதில் கலந்துகொண்டவர்கள் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

No comments: