News Just In

7/23/2025 11:44:00 AM

காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரனின் "மக்களின் பணம் மக்களுக்காக" நிகழ்ச்சித்திட்டம் தொடங்கி வைப்பு : கல்வியிலிருந்து தொடங்கிய பணி !

காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரனின் "மக்களின் பணம் மக்களுக்காக" நிகழ்ச்சித்திட்டம் தொடங்கி வைப்பு : கல்வியிலிருந்து தொடங்கிய பணி !


நூருல் ஹுதா உமர்

காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரனின் "மக்களின் பணம் மக்களுக்காக" நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வாக நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு காரைதீவு சுவாமி விபுலாந்தர் கலாச்சார மண்டபத்தில் இன்று (23) காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரனின் தலைமையில் நடைபெற்றது.

கல்முனை வலயக்கல்வி அலுவலக பிரதிக்கல்வி பணிப்பாளரும், காரைதீவு கோட்டக்கல்வி பணிப்பாளருமான ஏ. சஞ்சீவனின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் காரைதீவு கல்விக்கோட்டத்தின் 250 க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இக்கருத்தரங்கை கல்முனை வலயக்கல்வி அலுவலக நிர்வாக பிரதிக்கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

தனது சேவைக்காலத்தில் கிடைக்கும் பிரதேச சபை கொடுப்பனவுகளை காரைதீவில் கல்வியையும், காரைதீவு மண்ணின் மான்பையும் மேம்படுத்த "மக்களின் பணம் மக்களுக்காக" நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் செலவழிக்க உள்ளதாக நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்து வைத்து இங்கு உரையாற்றிய காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் உப தவிசாளரும், பிரதேச சபை உறுப்பினருமான ஏ.எம். ஜாஹீர், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.ஆர்.எம். ஹில்மி, சின்னத்தம்பி சிவகுமார், கிருஷ்ணபிள்ளை செல்வராணி, சவுந்தரம் சுலஸ்தனா, அபூபக்கர் பர்ஹான், காரைதீவு பிரதேச சபை செயலாளர் அ.சுந்தரகுமார், பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

No comments: