மட்டக்களப்பு வாகரை பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்கேணி பகுதியிலுள்ள கருவம்பஞ்சோலை குளத்தில் இன்று(06 ) மாலை 3 சிறுவர்கள் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கி 11வயதான 2 சிறுமிகளும் 10 வயதான ஒரு சிறுவனுமாக 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருகையில் வாகரை பனிச்சங்கேணியைச் சேர்ந்த பெற்றோர்கள் கருவப்பஞ்சேனை குளத்தில் தங்கியிருந்து மீன் பிடிக்க கடந்த வெள்ளிக்கிழமை சென்றுள்ள நிலையில் அவர்களுடன் 3 பிள்ளைகளும் சென்றுள்ளது. இன்று (6) பிற்பகல் பெற்றோர் மீன்களை பிடித்து பதனிட்டு கருவாடாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது பெற்றோருடன் சென்ற 3 சிறுவர்களும் கருவப்பஞ்சேனை குளத்தில் மீன்பிடித்து விட்டு குளத்தில் இறங்கி நீராடிய போது குளத்தின் நடுவிலிருந்த 16 அடி ஆழமான குழியில் சிக்கி நீரில் மூழ்கிய நிலையில் பரிதாபகரமாக உயிரிழந்தனர்.
உயிரிழந்த சிறுவர்களில் ஒரு சிறுமியும் சிறுவனும் சொந்த அண்ணன் தங்கையின் குழந்தைகள் ( மச்சான்,மச்சாள்) என்பதுடன் மற்றைய சிறுமியும் அவர்களின் உறவுக்கார சிறுமி என தெரிவிக்கப்படுகிறது
இக் குளத்தை சுற்றி அமைக்கப்பட்ட குளக்கட்டை ஒப்பந்த அடிப்படையில் பெற்றவர்களால் குளத்தின் பல பகுதிகளில் ஆழமான குழிகளை தோண்டி மணல் எடுத்துள்ள நிலையில் அவர்களால் தோண்டப்பட்ட ஆழமான குழி ஒன்றில் விழுந்தே குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். குழந்தைகளின் இறப்புக்கு ஒப்பந்தக்காரர்களும் இக் குழிகளை மூடித் தருமாறு அறிவித்தும் கவனமெடுக்காத அதிகாரிகளுமே காரணம் என பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்

No comments: