இலங்கை பாடசாலை கிரிக்கட் சங்கத்தினால் நடத்தப்பட்ட 15 வயதுக்குட்பட்ட டிவிஷன் 03 கடின பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் நடாத்தப்பட்டது. இதில் கல்முனை ஸாஹிரா அணியும், உஹன மகா வித்தியாலய அணியும் மோதியது.
முதல் இன்னிங்சில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற உஹன மகா வித்தியாலய அணி 32 ஓவர்களை எதிர்கொண்டு 08 விக்கெட்டுகளை இழந்து 140 ஓட்டங்களை பெற்று போட்டியை முடிவுக்கு கொண்டு வந்தனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை ஸாஹிரா அணி 08 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களை பெற்று முதல் இன்னிங்ஸில் வெற்றி பெற்றது.
இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்து முதலில் துடுப்பெடுத்தாடிய உஹன மகா வித்தியாலய அணி 04 விக்கட்டுக்களை இழந்து 109 ஓட்டங்களை பெற்று டிக்லாயர் செய்து போட்டியை சாஹிறாக் கல்லூரிக்கு வாய்ப்பை வழங்கியதற்கமைய வெற்றி இலக்காக 19 ஓவர்களுக்கு 111 எனும் இலக்கை நிர்ணயித்தனர்.
வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஸாஹிரா கல்லூரி அணி 04 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து இரண்டாவது இன்னிங்ஸிலும் வெற்றி பெற்றது. மேலும் கல்முனை ஸாஹிரா அணி வீரர் எஸ்.ஆபித் 52 பந்துகளில் 54 ஓட்டங்களை பெற்றார்
பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். ஜாபீர், இணைப்பாடவிதான பொறுப்பதிபர் எம்.எம். தன்ஸீல், ஸாஹிரா அணிக்கு பயிற்சி வழங்கிய பொறுப்பாசிரியர் எம்.எம். றஜீப், இதற்கு உதவிய ஜப்ரான் ஆதம்பாபா, ஆகியோருக்கும் பாடசாலை சமூகம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது

No comments: